Connect with us

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு- இருவர் கைது

cinema news

ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீச்சு- இருவர் கைது

தமிழ் சினிமாவில் தமிழ் பாடல்களை ராப் வடிவில் கொடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா . கோவையை பூர்விகமாக கொண்ட இவர் நட்பே துணை, சிவக்குமாரின் சபதம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஷால் நடித்துள்ள ஆம்பள உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முக்கிய காரணமாக இவர் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

சென்னை பனையூரில் இவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் மேல் மர்ம ஆசாமிகள் இருவர் கல் எறிந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தில் இருப்போர் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

போலீசை பார்த்ததும் கல் எறிந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களின் கார் பதிவு எண்ணை வைத்து அது அஜய் வாண்டையார் என்பவருக்கு சொந்தமான கார் என்பதை கண்டறிந்து அவரிடம் விசாரித்துள்ளனர்.

அவர்கள் அஜய் வாண்டையாரிடம் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்த வட பழனி பிரேம்குமார், மதுரை அர்ஜூன் என தெரிய வந்தது.

இந்நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

More in cinema news

To Top