Connect with us

ஆர்யா மீது பெண் தொடுத்த மோசடி வழக்கில் திருப்பம்

cinema news

ஆர்யா மீது பெண் தொடுத்த மோசடி வழக்கில் திருப்பம்

நடிகர் ஆர்யா ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசி திருமண மோசடி மற்றும் பண மோசடி செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாககூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியை சேர்ந்த  விட்ஜா என்ற பெண் சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால், அதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் ராஜபாண்டியன் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட், உரிய விசாரணை நடத்தி, பதில் அளிக்குமாறு சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், ஆர்யாவிடம் புகார் அளித்த பெண்ணான விட்ஜாவிடமும் வீடியோகால் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஆர்யா என்ற பெயரில் அந்தப் பெண்ணிடம் பேசி, ரூ.70 லட்சம் மோசடி நடைபெற்றது. உறுதி செய்யப்பட்டது.

இதில் சென்னை புளியந்தோப்பு முகமது அர்மான்(32) என்பவர் மோசடியில் ஈடுபட்டதும், அவரது உறவினர் முகமது ஹூசைனி பையாக்(34) உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

 

More in cinema news

To Top