Published
1 year agoon
ஆர்யா காட்டில் இந்த வருடம் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்த சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகாவிட்டாலும் ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது எனலாம். அதன் பின்பு அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகி அதுவும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டெடி படத்துக்கு பிறகு இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனுடன் மற்றொரு படம் இணைகிறார் இவர், சக்தி செளந்தர்ராஜன் இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை நேற்று இப்படத்தின் பூஜை நடந்தது.
டெடி படத்தை சக்தி செளந்தர்ராஜன் சிறப்பாக இயக்கி இருப்பார். அதனால் சக்தி செளந்தர்ராஜனின் இந்த படத்துக்கும் சினிமா ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.