முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனை ஜாதியை சொல்லி திட்டியதாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்தது இதனால் அவர் துறை பறிக்கப்பட்டு அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது.
இதை பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டித்துள்ளார்.
நேற்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்கள் தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய ரீதியாக திட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் இன்று ராஜ கண்ணப்பன் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது!
சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அமைச்சர் மேல் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்பினால் ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்!என தெரிவித்துள்ளார்.