எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றி முரசு கொட்டி வருகிறது. படம் பிரமாண்டமாக இருப்பதாகவும் சிறப்பாக இருப்பதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர்.
இதில் ராம்சரணின் காதலியாக சீதா என்ற கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.
மிக நீண்ட இந்த படத்தில் ஆலியா பட் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
இதனால் ஆலியா பட் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்த ராஜமவுலியை அன்ஃபாலோ செய்துவிட்டார் என தகவல் சொல்லப்படுகிறது.
ஆனால் அதற்காகதான் அன்ஃபாலோ செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என தெரியவில்லை.