Latest News
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் மாற்றம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கடந்த வருடம் மே மாதத்தில் திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
கடந்த ஆட்சிக்காலங்களில் முக்கிய அமைச்சரக துறைகளில் ராஜகண்ணப்பன் பதவி வகித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
