Entertainment
ரஜினி நடித்த திகில் படம் கழுகு வெளியாகி இன்றுடன் 41 வயது
எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1981ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி வெளியான திரைப்படம் கழுகு.
படத்தின் டைட்டில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை பார்வையாளர்களை இப்படம் கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது.
நரபலியையும் போலி சாமியார்களையும் மையப்படுத்தி வந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
சில காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைத்தன என சொல்லலாம். அதி நவீன பஸ் இப்படத்தின் சிறப்பு அடையாளமாகும்.
இரும்பு மனிதனுடன் சண்டை, இளையராஜாவின் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை மிகுந்த திருப்தி படுத்தியது எனலாம்.
காதலெனும் கோவில், தேடும் தெய்வம் நேரில் வந்தது, பொன்னோவியம், போன்ற பாடல்களை இளையராஜா இனிமையாக இசையமைத்திருந்தார்
இந்த படம் வெளிவந்து இன்றுடன் 41 வருடங்களை நெருங்கி விட்டது.
