cinema news
வெள்ளித்திரையில் வாணிபோஜன்!…வித்தியாசம் காட்டும் விதார்த்!…ரனகளப்படுத்துவாரா ரகுமான்?…
சின்னத்திரை மெகா தொடர்கள், டி.வி. ஷோக்களினால் தமிழக ரசிகப்பெருமக்களிடையே பாப்புலர் ஆனவர் வாணி போஜன். தனது நளினமான நடிப்பினால் பலரையும் வசியம் செய்து வைத்தது போல தன் வசம் இழுத்து வைத்திருப்பவர் இவர். சின்னத்திரை நயன் தாரா என இவர் அழைக்கப்படுவது அறிந்த ஒன்றே.
இப்போது வெள்ளித்திரையே நோக்கி நகர்ந்துள்ளது சின்னத்திரையில் இது நாள் வரை மையம் கொண்டிருந்த இந்த வாணி புயல். சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள “அஞ்சாமை” படத்தின் டிரையலர் வெளியிடப்பட்டது. கல்வியை மையமாகக்கொண்டே படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக சொல்கிறது படத்தின் டிரையலர்.
தெருக்கூத்து நடனக்ககலைஞராக நடிக்கிறார் போல விதார்த். தனது மகனிடம் இந்த காலத்ததுல நாம முன்னேறனும்னா அது படிப்பால மட்டும் தான் முடியும்னு சொல்லி வசனம் பேசுகிறார். அதே போல ரகுமான் இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். டிரையலரில் காட்டப்படும் காட்சிகள் நீட் தேர்வு குறித்தே வருகிறது. வழக்கறிஞர் ரகுமான் வாதாடும் காட்சிகளில் பேசும் வசனங்கள் படத்தின் கதைக்கருவை தெளிவாக சொல்லி விடுகிறது.
விதார்த் ஒரு வித்தியாசமான பாதையில் தமிழ் சினிமாவில் பயணிக்கத்துவங்கியுள்ளார் என்பது அவரது முந்தைய படங்களின் மூலம் தெரிய வந்தாலும், “அஞ்சாமை” படத்திலும் தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு புதிய பாதையை தேர்வு செய்துள்ளார் என்பதுவும் தெளிவாக தெரிகிறது.
வாணி போஜனுக்கு சின்னத்திரை போல வெள்ளித்திரையும் அங்கீகாரம் கொடுக்குமா?. தொலைக்காட்சி கொடுத்த தனித்துவத்தை தக்க வைக்க உதவுமா திரைஅரங்கம் என்பது படம் வெளி வந்ததும் தெரிய வரும்.