cinema news
விளாசிய விதார்த்!…வாய்ப்பே இல்லையாமே வாணி?…அஞ்சாமை பட விமர்சனம்…
திருச்சிற்றம் புரடெக்சன்ஸ் தயாரிப்பில் சுப்புராமன் இயக்கத்தில் வெளி வந்துள்ளது “அஞ்சாமை”. ராகவ் பிரசாத் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். விதார்த் கதாநாயகனாக நடிக்க, சின்னத்திரை பிரபலம் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை தனது பிள்ளைகளுக்கு தெளிவாக எடுத்துச்சொல்லும் கிராமத்து தந்தையாக விதார்த். தனது நடிப்பால் படத்தை மகுடம் சூட வைத்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் விளாசி தள்ளியுமிருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வாணி போஜன். வாய்ப்பே இல்லை வாணி என படம் பார்த்தவர்கள் சொல்லும் படி பக்குவப்பட்ட நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்டவர், வெள்ளித்திரையில் நிச்சயம் ஒரு மெகா ரவுண்டு வருவார் போல “அஞ்சாமை”க்கு பிறகு.
நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறது விதார்த் குடும்பம். நல்ல மார்க் எடுக்கும் விதார்த்தின் மகனின் மருத்துவர் கனவு பலிக்கிறதா? என்பது தான் கதையின் மீதி. வழக்கறிஞராக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுமான். கோர்ட் சீன்களில் வாதாடும் நடிப்பில் இவர் ஸ்கோர் செய்கிறார்.
படக்கதையை முதல் பாதியில் விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனர் இரண்டாவது பாதியில் சில தொய்வுகள் இல்லாமல் பார்த்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம்.
நீட் தேர்வின் மீது நம்பிக்கையும், அதன் மீது ஆர்வமும் கொண்டவர்கள் “அஞ்சாமை”யின் பக்கம் கூட வரமாட்டாகள். ஆனால் இதில் மாற்று கருத்து உள்ளவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கலாம் இந்த படம். விதார்த், வாணி, ரகுமான், விதார்த் – வாணி தம்பதியருக்கு மகனாக நடித்திருக்கும் கிரித்திக் மோகனின் நடிப்பும் அசத்தல்.
“அஞ்சாமை – அதிரச்சி வைத்தியம்”