cinema news
தேவா போட்ட மெட்டுக்கு இணையாகுமா!…துள்ளிக்குதிச்சு ஆட வைச்சவராச்சே!…இப்போ நினைச்சாலும் ஆட்டம் போட தோனுமே!…
தேவா பல ஆண்டுகளாக தமிழ் சினிமா இசைத்துறையில் மையம் கொண்டிருந்த புயல் என்றே சொல்லலாம். ரஜினிக்கு இவர் “அண்ணாமலை”யில் போட்டிருந்த தீம் மியூசிக் தான் இப்போ வரை ரஜினியின் டைட்டில் கார்டு மியூசிக். இருவரின் பாட்ஷா வும் பெயர் சொல்ல வைத்தது.
கமல்ஹாசனுக்கு “அவ்வை ஷண்முகி”,இப்படி பலருக்கும் தனது இசையமைத்துக்கொடுத்துள்ளார்இசையமைத்துக்கொடுத்துள்ளார். தேவா என்றாலே கானா பாடல்கள்தான் என்றே தான் சொல்லியாக வேண்டும். அந்த அளவில் இவர் இசைத்த கானா பாடல்கள் எல்லாம் பெரிய வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருந்தது.
சரத்குமார் கவுண்டமணி நடித்த “சூரியன்” படத்தில் பிரபு தேவா நடனமாடிய “லாலாக்கு டோல் டப்பிமா” சொல்லப்போனால் தமிழ் சினிமாவிற்கு தேவா கொடுத்த தனது முதல் கானா பாடல் இது எனவே சொல்லலாம்.
“காதேலே நிம்மதி” படத்தில் வந்திருந்த ‘வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ பாடல். படம் வெளி வந்து படத்துக்கு கிடைத்த பெயரைவிட இந்த பாடலுக்கே அதிகமான வரவேற்பு என்று சொல்லலாம். பிரசாந்த் நடித்து வெளியான “கண்ணெதிரே தோன்றினால்” படத்தில் வந்த ‘சலோமியா’ பாடல் சூப்பர் ஹிட் ஆன தேவாவின் கானா பாடல்களில் முக்கியமானது.
“காதல் கோட்டை” படத்தில் வந்திருந்த ‘கவலைப்படாதே சகோதரா’ பாடலும் தேவாவின் கானா தான். அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட கானா என சொல்லும் அளவிற்கு ஹிட் ஆன “நினைவிருக்கும் வரை” படத்தில் வந்திருந்த ‘ஊத்திக்கின்னு கடிச்சிக்கவா’ பாடலை சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் துள்ளிக்குதித்து ஆட வைத்த பாடல் இது அந்நாளில்.இது போன்ற கானா பாடல்களால் தான தேவா கானா கிங் என அழைக்கப்படுகிறார் கோலிவுட்டில்.