cinema news
ஆறு படங்கள் நாளைக்கு ரீலீஸ்!…அடி தூள்..ஆனா எந்த படத்த முதல்ல பாக்குறதுன்னே தெரியலையா?…
சூனியம் வைத்து மாதிரியான நிலையில் தான் தமிழ் சினிமா இந்தாண்டு ஆரம்பித்தது. இளையராஜா பேட்டியின் மீதான சர்ச்சை, சுசித்ராவினால் சிக்கல் இப்படி நித்தம் ஏதவாது ஒரு செய்தி காதுகளில் விழுந்து சர்ச்சையை தூண்டிய விதமாகவே இருந்து வந்தது. அதோடு மட்டுமல்லாமல் பெரிதாக படங்களும் அதிகமாக வெளியாமல் இருந்ததும் கூடத்தான்.
ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு நிலைமை லேசாக மாறத்துவங்கியது. வார,வார வெள்ளிக்கிழமைகளில் எப்பவும் போல படங்கள் சொற்ப எண்ணிக்கையில் வெளியாக துவங்கியது. சுந்தர்.சி .யின் “அரண்மனை-4”, கவின் நடித்த “ஸ்டார்”, ஆதியின் “பி.டி.சார்” இப்படி சில படங்கள் அதிகமாக பேசப்பட்டது.
விஷால் – ஹரியின் கூட்டணியில் வந்த “ரத்னம்” மெகா ப்ளாப் ஆனது. ஆனாலும் படங்களே வெளிவராமல் இருந்த கோலிவுட்டிலிருந்து தொடர்ச்சியாக திரையை வந்தடைந்தது புதுப்படங்கள். ராமராஜனின் “சாமானியன்”. இப்படி ஒருவர் பின் ஒருவராக திரையை நோக்கி படையெடுக்கத்துவங்கினர்.
இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை 6 புதிய படங்கள் ரிலீஸாக உள்ளது. விதார்த் – வாணி போஜன் நடித்துள்ள “அஞ்சாமை” நீட் தேர்வை மையமாக மையமாக கொண்ட கதையை வைத்து வெளிவர உள்ள “அஞ்சாமை” க்கு சற்றே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
சத்யராஜ் நடிப்பில் “வெப்பன்”, வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள “ஹரா”, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் எதிர்மறையாக நடித்துள்ளதாக சொல்லப்படும் “தண்டுபாளையம்” ஆகிய படங்களோடு “இனி ஒரு காதல் செய்வோம்”, “நிஷா” உள்ளிட்ட படங்களும் வெளியாக இருக்கிறது. இவர்களோடு போட்டி போடும் விதமாக “இந்தியன்” முதல் பாகமும் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.