cinema news
பாரா பராக்?…இஷ்டத்துக்கு ஆடி தீத்துக்குங்க…பேன்ஸ ஆடவைக்க போகும் இந்தியன் தாத்தா!…
கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான “இந்தியன்” படம் தமிழ் சினிமாவில் புரட்டி போட்டது. வரலாறு காணாத வசூலை குவித்து தந்ததோடு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த கூட்டணி மீண்டும் இந்தியன்-2 படத்திலும் களம் இறங்கி உள்ளது. படத்தினுடைய ரிலீஸ் தேதியும், மேலும் ஒரு போஸ்டர் படத்தையும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது படக் குழு.
வருகிற ஜூலை 17ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கிறது இருக்கிறார் இந்தியன்-2. முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா செய்த அட்டகாசங்களின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகம் அமையும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் படத்தினுடைய ‘பாரா’ பாடலின் ஆடியோ ரிலீஸ் நாளை மாலை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ‘லைக்கா’ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள படத்தின் பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.பொதுவாக சங்கர் என்றாலே பிரமாண்டம் தான். கமல் என்றால் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த இருவரின் கூட்டணி வெகு ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது. என்னதான் சுசித்ரா சொன்ன செய்திகள் காட்டுத்தீ போல பரவி பற்றி எரிந்தாலும், இந்தியன்-2 படத்தினுடைய பாடல் வெளியாக உள்ள செய்தி சுசி-லீக்ஸிலிருந்து மாற்றி ரசிகர்களை இந்தியனை பற்றியே யோசிக்க வைத்து வருகிறது.
மொத்தத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்தியன் தாத்தா தனது ரசிகர்களை துள்ளி குதித்து குத்தாட்டம் போட வைக்க போகிறார் என்பது தான் இப்போது கிடைத்துள்ள நல்ல செய்தி தமிழ் சினிமாவில்.