Connect with us

தள்ளிப்போகுமா இந்தியன் – 2 ரிலீஸ்?…எதிர்ப்பார்ப்புக்கு கிடைக்குமா பலன்?…

Indian - 2

cinema news

தள்ளிப்போகுமா இந்தியன் – 2 ரிலீஸ்?…எதிர்ப்பார்ப்புக்கு கிடைக்குமா பலன்?…

ஷங்கர் – கமல்ஹாசன் இவர்கள் இருவரின் காம்போவில் வரவிருக்கும் படம் “இந்தியன் – 2”. ட்ரெண்டியாக என்ன செய்திருப்பார்கள் என எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. காரணம் இன்றைய 2கே கிட்ஸுக்கு லஞ்சம், ஊழலின் மீதெல்லாம் கவனம் இருக்குமா?. “இந்தியன்” முதல் பாகம் கொடுத்த விழிப்புணர்வு பாடத்தின் ஏற்புத்தன்மை இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்குமா? என்பதால்.

இப்படி பல விதமான கருத்துக்களுக்கு இடையே தான் “இந்தியன் – 2″வின் டிரையலர் வெளியானது. கமல் எத்தனை வேஷங்களில் டிரயலரில் வருகிறார் என போட்டியே நடத்தி விடலாம். அந்த அளவிற்கு தான் இருந்தது டிரயலர். ஆடியோ ரீலீசுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களை விட குறைவானவைகளை மட்டுமே பெற்றுள்ளது டிரயலர்.

Indian Kamal

Indian Kamal

பட வேலைகள் எல்லாம் முடிக்கப்பட்ட நிலையில் வருகிற பன்னிரெண்டாம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்ஸார் போர்டின் தணிக்கைக்காக படம் சென்றுள்ளது. தமிழ் மொழிக்கான தணிக்கை இன்று நடக்கிறதாம். மற்ற மொழிகளுக்கு வரும் நாட்களில் நடக்க உள்ளதாம்.

சென்ஸார் போர்டு கொடுக்கும் சான்றிதழின் படி தான் படம் தரம் பிரிக்கப்படும். இதில் தாமதம் ஏதும் நடந்தால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு விடும் என பிரபல திரைப்பட விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

அதே நேரம் சென்ஸாரில் ஏதும் தடை ஏற்பட்டால் மட்டுமே வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இது போன்ற சூழ்நிலையை பல படங்கள் கடந்துள்ளது. அதே மாதரி சொன்ன தேதியில் படம் வெளியிடப்பட்டது என்பதால் “இந்தியன் – 2″ம் இதை கடந்து வந்து இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

More in cinema news

To Top