ajith
ajith

அப்படித்தான் செய்வேன் உங்களுக்கெனன்ன…அது என் இஷ்டம்!…ஆவேப்பட்ட அஜீத் மகள்?…

குழந்தை நடசத்திரமாக அறிமுகமாகி நாளடைவில் கதாநாயகன், நாயகி என பலரையும் பார்த்துள்ளது தமிழ் சினிமா. சிம்பு, மீனா என பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் இப்பொது நுழைந்துள்ளவர் அனிகா சுரேந்திரன். “என்னை அறிந்தால்” படத்தில் அஜீத்குமாரின் மகளாக நடித்தார். ஆனாலும் இவரை அதிகம் பேர் கவணிக்கும் விதமாக அந்த படம் அமையவில்லை.

மீண்டும் அஜீத்திற்கு “விஸ்வாசம்” படத்தில் மகளானார். படம் தந்தை-மகள் பாசத்தை பற்றியது என்பதால் அஜீத், நயன்தாராவிற்கு பிறகு படத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவர் இவரே தான் என்று சொல்லலாம். ‘கண்ணான கண்னே, என் மீது சாயவா’ பாடலும் ,”விஸ்வாசம்” படத்தின் கிளைமேக்ஸ் சீனும் தமிழகத்தையே குலுக்கியது வெளியான வேளையில்.

ajith aneeka
ajith aneeka

அனிகா என்றால் அஜீத்தின் மகள் என்று சொல்லும் அளவிற்கு இந்த படம் அவரை உயர்த்தியது. “புட்ட பொம்மா” படத்தில் தனது அறிமுகத்தை பெற்றிருந்த இவர். “ஓ மை டார்லிங்” என்ற மலையாள படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி குழந்தையாகவே பார்த்து பழக்கப்பட்ட இவர் ஹிப்-ஆப் தமிழா ஆதி கதா நாயகனாக நடிக்கும் “பி.டி. சார்” படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடித்து இயக்கும் அவரின் 50வது படமான “ராயன்” படத்திலும் நடித்துள்ளார் என செய்திகள் சொல்லியிருக்கிறது.

இப்போது இவர் அணியும் ஆடைகள் குறித்து அவ்வப்போது  எழுந்து வரும் விமர்சன்ங்க்களுக்கு தனது பதில்களை சொல்லியிருக்கிறார். ஆடை எப்படி அணிய வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் அதில் மற்றவர்கள் தலையிட முடியாது, அதே போல என விருப்பத்தின் படி நான் செயல்படுவதை பற்றி வரும் விமர்சனங்களுக்கெல்லாம் தன்னால் பதில் சொல்ல முடியாது என்று காட்டமாக சொல்லிவிட்டார்.

அதே போல எப்படி இருந்தால் இவங்களுக்கென்ன என நினைத்தாலும், இது போன்ற் விஷயங்கள் தன்னை பாதிக்கிறது, நானும் மனுஷி தானே என்று தனது பக்கத்தில் இருக்கும் நியாயத்தை தெளிவாக பேசியிருக்கிறார் அனிகா சுரேந்திரன்.