---Advertisement---

தமிழகத்தில் மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

By Sri
Published on: April 13, 2020
---Advertisement---

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. ஆனால் தமிழக அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கோவையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை  அளித்த  2 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பணியில் இருந்த 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த மருத்துவர்களின் சிகிச்சைப் பெற்றவர்களை ட்ராக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க