Connect with us

பொங்கல் பை சிறப்பு தொகுப்பு ஜனவரி 31 வரை விநியோகம்

Latest News

பொங்கல் பை சிறப்பு தொகுப்பு ஜனவரி 31 வரை விநியோகம்

தமிழக மக்கள் பொங்கல் கொண்டாடுவதற்காக  தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 500 கிராம் பாசிபருப்பு, 100 கிராம் நெய், 100 கிராம் மஞ்சள்தூள், 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மல்லித்தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 50 கிராம் மிளகு, 200 கிராம் புளி,

250 கிராம் கடலைப்பருப்பு, 500 கிராம் உளுத்தம்பருப்பு, 1 கிலோ ரவை, 1 கிலோ கோதுமை மாவு, 500 கிராம் உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சிலர் சூழ்நிலை காரணமாக  உரிய நேரத்தில் அந்த பொருட்களை பெற முடியாமல் போகலாம். பொங்கல் பிஸியில் பலர் பொருட்கள் வாங்க முடியாமல் விட்டு விடலாம்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மக்கள் சரியான நேரத்தில் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.

இந்த  நிலையில் மக்கள் கொஞ்சம் பொறுமையாக பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறும் வகையில் ஜனவரி 31ம் தேதி வரை இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  கோமாவில் நடிகர் வேணு அரவிந்த்

More in Latest News

To Top