ரஜினியை சந்தித்த சிறுத்த சிவா - பின்னணி என்ன

ரஜினியை சந்தித்த சிறுத்த சிவா – பின்னணி என்ன?

நடிகர் ரஜினியை இயக்குனர் சிவா சந்தித்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கிவர் சிவா. இதில் விஸ்வாசம் பல கோடி வசூலை செய்துள்ளது.

எனவே, இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்குகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவர் கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்துப்போனதால் அவருடயை அடுத்த படத்தை அவரே இயக்குகிறார் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதோடு, அவர் விஜய்க்கும் கதை கூறியிருக்கிறார் என செய்திகள் கசிந்துள்ளது.

இந்நிலையில், திடீரென அவர் நேற்று நடிகர் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். எனவே, அவர் ரஜினிக்கும் கதை கூறி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விஸ்வாசம் வெற்றிக்கு வாழ்த்துக்களை மட்டுமே ரஜினி தெரிவித்தார். படம் இயக்குவதை பற்றி பேசவில்லை என சிவா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.