Connect with us

Latest News

பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழா கொண்டாடுவதற்காக பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு ஒன்று வழங்கப்படுகிறது.

இந்த தொகுப்பில் மஞ்சள்தூள், மிளகாள்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்புடன்  முழு கரும்பும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொகுப்பில் முறைகேடுகள் நடப்பதாகவும் பல ஊர்களில் பொருட்களை குறைத்து குறைத்து கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி கொடுத்தால் அதில் தவறு ஏதும் நேர்ந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  14 வருடங்களாக சினிமா களத்தில் ஜிவி பிரகாஷ்

Latest News

என்னோட இன்னொரு பெயர் அய்யாத்துரை- முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை நடந்த கூட்டத்தில் ரஷ்ய தலைவர் ஸ்டாலின்  மறைவின்போது பிறந்ததால் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் தனது தந்தை வைத்ததாக கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த கழக திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின்,

எனக்கு அய்யாதுரை என்ற பெயரே எனக்கு வைப்பதாக இருந்தது. ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் இறந்த நிலையில் அந்த பெயர் எனக்கு வைக்கப்பட்டது என கூறியுள்ளார்.

பாருங்க:  பிச்சைக்காரன் 2 போஸ்டருக்கு எதிர்ப்பு
Continue Reading

Entertainment

கர்வத்துடன் சென்று காளை விளையாட்டில் வென்று காட்டிய சிறு பெண்ணை பாராட்டிய சசிக்குமார்

ஒரு சிறு பெண் சில வருடங்களாக சில ஜல்லிக்கட்டுகளில் தனது காளையை அவிழ்த்தும் அது வெல்லாத காரணத்தால் ஆறுதல் பரிசு கொடுத்தும் அதை வாங்க மறுத்து சென்றதை பார்த்து இருப்பீர்கள்.

யோக தர்ஷினி என்ற பெண் வளர்த்த காளையான முத்துக்கருப்பு ஒரு வழியாக கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசை வென்றது.

கர்வத்துடன் இருந்து வென்று காட்டிய அந்த பெண்ணை இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் மனமார பாராட்டியுள்ளார்.

பாருங்க:  இந்தியன் 2 விலிருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ்.....
Continue Reading

Entertainment

செல்வராகவன் , எஸ்.வி சேகர் போன்றோருக்கு கொரோனா தொற்று

இயக்குனர் செல்வராகவன் இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து 7ஜி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன பல உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தார்.

தற்போது இயக்குனராக இருந்து வரும் இவர் சாணிக்காகிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கோவி 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் எஸ்.வி சேகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருமே தங்களிடம் தொடர்பில் இருந்தவர்களை  மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.

பாருங்க:  ஜிகாத் குறித்த பிஷப்பின் பேச்சு- முதல்வர் பினராயி கண்டனம்
Continue Reading

Trending