இந்திய அளவில் பிரபலமான பாடகியான லதா மங்கேஷ்கர் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் பிரபலமான பாடல்கள் பாடியுள்ள லதா மங்கேஷ்கர் தமிழில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆராரோ பாடலும், சத்யா திரைப்படத்தில் இடம்பெற்ற வளையோசை கல கல பாடலும், என் ஜீவன் பாடுது படத்தில் இடம்பெற்ற எங்கிருந்தோ அழைக்கும் என்ற பாடலையும் பாடியுள்ளார்.
இந்த மூன்று பாடல்களுமே இளையராஜா இசையில் வந்த பாடல்கள்தான். இதனால் இசைஞானி இளையராஜா தனக்கு லதா மங்கேஷ்கரின் மரணம் மிகுந்த வருத்தமளிப்பதாக பெரிய துயரை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.