லதா மங்கேஷ்கர் விரைவில் கொரோனாவில் இருந்து மீள வேண்டுமென அவரது ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இனிமையான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லதா மங்கேஷ்கருக்கு 92 வயதாகிறது. இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் லதா மங்கேஷ்கர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லதா மங்கேஷ்கர் குணமடைய வேண்டும் என்று தனது ஆட்டோ முழுவதும் அவரது புகைப்படத்தை ஒட்டி பிரார்த்தனை செய்யும் மும்பையை சேர்ந்த சத்யவான் என்பவர்.
மேலும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்பான செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையுடன் இருப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.