முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றுதான் திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் உள்ளது. நாள்தோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிக அதிகம்.
நீண்ட வரிசையில் நின்றுதான் ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும் அந்த அளவு மக்கள் கூட்டம் முருகனை தரிசிக்க இங்கு அதிகமாக தினம் தோறும் இங்கு வந்து செல்கிறது.
கடற்கரையோரம் குடிகொண்டுள்ள முருகப்பெருமானை வணங்கி செல்வது மனதுக்கு சிறந்த புத்துணர்ச்சியை அளிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
இந்த கோவிலில் வருடா வருடம் மாசி மாதம் உற்சவம் நடைபெறும். முருகன் பச்சை சார்த்தி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தேர்த்திருவிழா போன்றவையும் நடைபெறும்.
நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இவ்விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.