பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்

27

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பவர் பேரறிவாளன். இவர் வெளியில் வரவேண்டுமென பிரதமர், குடியரசுத்தலைவர், ஆளுனர் போன்றோரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டு விட்டது இருப்பினும் இவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இவருக்காக கமல் ஒரு டுவிட் ஒன்றை இட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

பாருங்க:  கோவிலில் எடுக்கப்பட்ட முத்தக்காட்சி- தபு மீது புதிய சர்ச்சை