gountamani sivaji
gountamani sivaji

நக்கல்யா உனக்கு!…சிவாஜியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கவுண்டமணி!…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய ஆளுமையை பற்றி தமிழ் சினிமாவே நன்றாக அறியும். அவர் முன் நின்று பலரும் பேசுவதற்கு அஞ்சுவார்களாம். எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பவர்,  நன்னடத்தை, ஒழுக்கத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

எதற்கெடுத்தாலும் நக்கலாக பதில் கொடுப்பதையே பழக்கமாக கொண்டவர் கவுண்டமணி.
தனது நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படிதான் என்கின்றனர் அவரை பற்றி அறிந்த பலர்.

devar makan
devar makan

“தேவர் மகன்” படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் இருந்தாராம் சிவாஜி கணேசன்.

படத்தின் நடித்த நடிகர்கள், நண்பர்களை கூப்பிட்டு வெற்றியை கொண்டாடி, விருந்து வைத்திருக்கிறார். அதோடு “தேவர் மகன்” படத்தையும் திரையிட்டு காட்டினாராம் சிவாஜி.

விருந்துக்கு வந்த அனைவரும் சிவாஜியிடம் பேசிவிட்டு தங்களது கருத்துக்களை சொல்லியுள்ளனர். ஆனால் கவுண்டமணி மட்டும் எதுவும் சொல்லாமலே கிளம்பி விட்டாராம்.

இதனால் குழப்பமடைந்த சிவாஜி கணேசன்  அந்த கவுண்ட்டர் மட்டும் ஒன்றுமே சொல்லாம போயிட்டாரு, அவரை நான் பார்க்கனும்னு சொன்னேன்னு சொல் என தனது உதவியாளர் மூலம் கவுண்டமணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு பிறகு தன்னை சந்தித்த கவுண்டமணியடம் நீங்க மட்டும் ஏன் எதுவுமே சொல்லல என கேட்டிருக்கிறார் சிவாஜி.

அடுத்த நிமிடமே சிறிதும் யோசிக்காமல் எவ்வளவு பெரிய ஆள் நீங்க ஆனா அந்த சின்ன குழந்தை காலால மிதிபட்டு, நீங்க செத்து போனத பார்த்து எனக்கு ஒன்னும் சொல்ல தோணல என கவுண்டமணி அவரது பாணியில்  சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட சிவாஜி கணேசன் குலுங்கி, குலுங்கி சிரித்திருக்கிறார்..