அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது

31

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காதில் தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஒன்று நேற்று முன் தினம் உயிரிழந்தது. 40 வயதான அந்த யானையை தீப்பந்தம் கொண்டு விரட்டி அடிக்கிறேன் என காதில் தீ வைத்ததில் அந்த யானை தீக்காயங்களுடன் சுற்றி திரிந்துள்ளது.

இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானையை பிடித்து முதுமலை வன விலங்கு சரணாலயம் கொண்டு சென்று சிகிச்சை கொடுக்க முடிவு செய்தனர். அதற்குள் அந்த யானை பல லிட்டர் ரத்தம் ஏற்கனவே வெளியேறியதால் இறந்து விட்டதாக  கூறப்படுகிறது.

இறந்த யானையின் உடலை பார்த்து வனத்துறை ஊழியர் பெள்ளன் என்பவர் கதறி அழுதது பார்ப்பவர் கண்களை குளமாக்கியது.

கடும் பிரச்சினைகளை கிளப்பிய இந்த பிரச்சினையால் யானையை கொன்றவர்களை வனத்துறை தீவிரமாக தேடி வந்த நிலையில் அது அந்த பகுதியில் இருந்த விடுதி ஊழியர்கள் செய்த வேலை என தெரிந்தது.

தகுந்த விசாரணை நடைபெற்று இப்போது அதன் உரிமையாளரும், ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாருங்க:  மீண்டும் ஐயப்பசாமி மாலை அணிந்து சிம்பு