Published
11 months agoon
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராஜீவை வெடிகுண்டு மூலம் கொன்ற நேரடி குற்றவாளிகள் அனைவரும் இறந்து விட்டனர். ஆனால் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கொலையாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டனர்.
பேரறிவாளன் குற்றவாளிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பது அவர் மீதான வழக்கு. 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை பெற்ற அவர் இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்கு அலைந்த அவரது தாய் அற்புதம்மாள், இந்த 31 ஆண்டு காலம் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறைக்குள் கழிந்ததுள்ளது. ஒரு நிமிடம் யோசித்தால்தான் அதன் வலி, வேதனை புரியும். இதைக் கடந்த வந்துவிட்டார் என் மகன்.
முதலில் என் மகனுக்கு பரோல் கொடுத்து பெயில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
பேரறிவாளன் கூறியதாவது 30 ஆண்டுகளில் குடும்பத்தில் அனைத்து மகிழ்ச்சியான தருணங்களையும் இழந்துள்ளேன். திருமணம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.