தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

57

கடந்த 2016ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றது அதிமுக கட்சி. அதனால் முதல்வராக அதற்கு முன்பும் முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே முதல்வராக பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்று ஆறு மாதத்திற்குள் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். பின்பு சிறிது நாட்கள் அமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வராகவும் அதற்கு பின் நடந்த அரசியல் குழப்பங்களுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் தொடர்ந்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிந்து 5 வருடம் முடிந்து விட்ட நிலையில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடக்க இருக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது

பாருங்க:  ப்ளூ சட்டை மாறனே பாராட்டிய சார்பட்டா
Previous articleதா பாண்டியன் குறித்து விவேக் இரங்கல்
Next articleஸ்டாலின் தவறாக பரப்பி வருகிறார்- எடப்பாடி