Connect with us

இன்று மறைந்த நடிகர் முரளியின் பிறந்த நாள் – மகன் அதர்வா வாழ்த்து

Entertainment

இன்று மறைந்த நடிகர் முரளியின் பிறந்த நாள் – மகன் அதர்வா வாழ்த்து

தமிழில் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் முரளி. கர்நாடகாகாரர் ஆன ரஜினியை மட்டும்தான் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார் என்றில்லை. கர்நாடகாவை சேர்ந்த நடிகர் முரளியையும் பாலச்சந்தர்தான் தனது கவிதலாயா தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தியவர்.

பாலச்சந்தரின் கவிதாலயாவின் அடுத்த தயாரிப்பான புதியவன் படத்திலும் அறிமுகப்படுத்தினார். நடிகர் முரளியின் அப்பா பிரபலமான கன்னட இயக்குனராவார்.

தமிழில் இதயம், புதுவசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முரளி கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்தார். முரளி இருக்கும் வரை பிறருக்கு அதிகமான உதவி செய்தவர் என்று அவரை பற்றி கூறப்படுகிறது.

தனது கடைசி படமாக பாணா காத்தாடி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதில் அவர் மகன் அதர்வாவுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது தந்தை முரளியின் பிறந்த நாள் என்பதால் அவரது மகன் அதர்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  மூக்குத்தி அம்மன் படத்தின் கலர்ஃபுல் ஸ்டில்ஸ்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top