பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரனுக்கு கமல்ஹாசன் கொடுத்த வாய்ப்பு அவருக்கும், அவரின் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இன்று சேரன் வெளியேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி விட்டது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் கமல்ஹாசனிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது, ரகசிய அறைக்கு நீங்கள் செல்ல விரும்பினால் உங்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படும் என கமல்ஹாசன் கூறினர்.
அதற்கு சம்மதம் தெரிவித்த சேரன் அந்த அறைக்கு சென்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எனவே, சேரனை கமல்ஹாசன் காப்பாற்றிவிடுவார் என என எதிர்பார்க்கப்படுகிறது.
இது சேரனின் ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.