நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய நடிப்பாற்றல் புத்தகமே போடும் அளவையும் தாண்டி தான் இருக்கும்.
இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் கிடையாது. அதற்கு தேவையான கம்பீரமும், பாவனைகளை சிறு, சிறு காட்சிகளிலும் கூட சரியாக கொடுத்திருப்பார்.
இவருடன் எந்த நடிகர் நடித்திருந்தாலும் அந்த படம் இவரது நடிப்பிற்ககவே பேசப்பட்டதும உண்டு. அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் அளவில் நடித்து மிரட்டியிருப்பார்.
படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வருவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் இவர் என பல சொல்லி கேட்டிருக்கின்றோம். கதாநாயகனாக நடித்து முடித்த குணச்சித்திர வேடங்களில் நடக்க துவங்கியது வரை இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்திருக்கிறார்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் “தேவர் மகன்”. ரேவதி, கௌதமி கதாநாயகிளாக நடித்தனர்.
வடிவேலுவின் நடிப்பாற்றலக்கு தீனி போட்ட படம். அவரை உற்று பார்க்க வைத்த படங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்தது “தேவர் மகன்”.
அந்த படம் குறித்து கமல்ஹாசன் ஒருமுறை பேசுகையில் நாற்காலியில் உட்காருவது போல ஒரு காட்சியை எடுக்கப்பட இருந்ததாம்.
அதற்கான நாற்காலியை வரவழைத்தபோது அதன் மீது திருப்தியடையாமல் வேறு கொண்டுவர்ச்சொன்னாராம். இது பழங்காலத்து நாற்காலி போல இருக்கிறது என கோபமாக சொல்லிவிட்டாராம் இறுதியாக அவர் நினைத்தது போலவே ஒரு கொண்டுவரப்பட்டதாம் ஒரு நாற்காலி
படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு டப்பிங் பேச வந்திருக்கிறார்.அப்போது காட்சியை பார்த்துவிட்டு சிவாஜி எனக்காக இந்த நாற்காலியை தேடலையா? எனக்காக கேட்கலையா? என்ன சொல்லிவிட்டு சென்றதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்…
நடிப்பு ராட்சஷர்களான சிவாஜியும், கமலும் இணைந்து நடித்த படம் மிகப்பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது “தேவர் மகன்” படம்.