Raja Sekar

நடிகர் ராஜசேகர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் இன்று மரணமடைந்தார்.

பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராஜசேகர். பெரும் புகழ் பெற்ற ‘இது ஒரு பொன் மாலைப்பொழுது’ பாடலுக்கு தோன்றியவர். அதன்பின் அவரின் நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து பாலைவனச்சோலை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு உள்ளிட்ட சில திரைப்படங்களை அவர் இயக்கினார்.

அதன்பின் தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.