விஸ்வாசம் பட வசூல் பொய்யா? – தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் பதிலடி

179
விஸ்வாசம் திரைப்பட வசூல் பொய் என வெளியான செய்தியை அடுத்து அப்படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.

Viswasama movie collection controversy – இந்த வருட தொடக்கத்தில் அதாவது பொங்கல் பண்டிகையின் போது வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. அதன்பின் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை பட்டியலில் இருக்கிறது. ஆனால், விஸ்வாசம் படம் வசூல் தொடர்பாக வெளியான செய்தி பொய் என பிரபல தமிழ் சினிமா வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் #ViswasamFakeBOExposed என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து கிண்டலடித்தனர்.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கி வெளியிட்ட கே.ஜி.ஆர் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டு இருக்கின்றோம். எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும், விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை மறந்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது. Happy Diwali folks! ’ என பதிவிட்டுள்ளது.

பாருங்க:  ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் ‘தலைவி’ - விஜய் இயக்குகிறார்