தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பது அரசின் உத்தரவு.
இதனை அடுத்து, சில கடைகள் மட்டும் அரசின் விதி முறையின்படி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகளில் மக்கள் விடுமுறை நாட்களில் அதிகம் கூடுவதால் இறைச்சி கடைகளை திறப்பதற்கு தமிழக அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாநகராட்சியில் வீடுகளுக்கே இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாநகராட்சியில், போன் செய்தால் வீடுகளுக்கு வந்து இறைச்சி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 90877 – 90177 என்ற எண்ணுக்கு அழைத்தால் வீடுகளுக்கே வந்து இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்று திருப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.

