Latest News
இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்
இன்று சிவன்கோவில்களில் பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. அமாவசை இருதினங்களுக்கு முன்பும், பெளர்ணமிக்கு இரண்டு நாள் முன்பும் திரயோதசி திதியில் வரும் ஒரு நிகழ்வே பிரதோஷம் ஆகும்.
சிவபெருமானுக்கும் நந்திக்கும் உகந்ததாக கருதப்படும் இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை சிவபெருமானுக்கும் நந்திக்கும் அபிசேகம் நடைபெறும்.
இந்த அபிசேகத்தில் கலந்து கொண்டு பக்தர்கள் சிவபெருமானின் பக்தி பாசுரங்களான தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை பாடுவார்கள்.
பிரதோஷங்களில் பிரதோஷம் தோன்றிய நாள் என்று சொல்லப்படக்கூடிய சனிக்கிழமையில் வரும் பிரதோஷமும் சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படும் திங்கட்கிழமை வரும் பிரதோஷமும் மிக சிறப்பானதாகும்.
இன்று திங்கட்கிழமை வரும் பிரதோஷம் என்பதால் விசேஷமான பிரதோஷமாக கருதப்படுகிறது ஆதலால் கோவில் சென்று வழிபட்டு வாருங்கள்.
