Latest News
ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டம்- 16ம் தேதி பூமி பூஜை
திருமலை திருப்பதியின் அருகே புகழ்பெற்ற அஞ்சனாத்ரி மலை உள்ளது. ஆஞ்சநேயர் பிறந்ததாக கருதப்படும் இம்மலையை அதற்கு உரிய வரலாறு மற்றும் ஆன்மிக சான்றுகளுடன் கடந்த வருடம் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த மலையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வைத்துள்ள திருப்பதி தேவஸ்தானம் வரும் 16ம் தேதி பூமி பூஜையை நடத்த இருக்கிறது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
