Latest News
இன்று சோமவார பிரதோஷம்- சிவாலயம் செல்ல மறவாதீர்
பிரதோஷம் வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்கள் ஆகும். பிரதோஷத்தன்று மாலை 4.30 முதல் 6 வரையிலான நேரத்தில் அனைத்து கோவில்களிலும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறும்.
சிவபெருமானுக்கு நந்திக்கு இந்த காலங்களில் அபிஷேகம் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்வது நமது பாவங்களை போக்கி நமக்கு அளவில்லா நன்மையை பெற்றுத்தரும்.
இன்று திங்கட்கிழமையில் மாசி மாதத்தில் வரும் முதல் பிரதோஷம் ஆதலால் சிவாலயம் சென்று நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகத்துக்குரிய பொருட்கள் வாங்கி கொடுத்து சிவ தரிசனம் பெறுங்கள்.
