கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி

கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அப்பாவி பெண் கொடூரமாக கடந்த வாரம் கொல்லப்பட்டதை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்த பிறகு கோலம் போட்ட இடத்திலேயே சித்ரா என்ற அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

அந்த பெண்ணை கொலை செய்தது அந்த வீட்டின் மாடியிலே தங்கி இருந்த பிருந்தா என்பவள்தான்.

பிருந்தா என்பவள் இறந்து போன சித்ரா வீட்டின் மாடியில் வசித்து வந்திருக்கிறாள். அந்த வீட்டு ஓனர் அம்மாவே சித்ராதான். 3 மாத கைக்குழந்தையுடன் பிருந்தா வசித்து வந்திருக்கிறாள். அவரது கணவர் செல்வக்குமார் வெளிநாட்டில் இருக்க இவளுக்கு சீர்காழியை சேர்ந்த ரியாஸ் என்ற நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியுடன் தொடர்பு. ரியாஸ் அடிக்கடி பிருந்தா வீட்டுக்கு வந்து போனதை வீட்டு ஓனர் அம்மா சித்ரா கண்டித்துள்ளார்.

இதனால் கோபமான ரியாஸ் தனது காதலுக்கு இவர் தடையாக இருக்கிறார் என கடும் கோபம் கொண்டு தனது காதலி பிருந்தாவிடம் ஐடியா கேட்டு , பிருந்தாவின் ஐடியா படி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சித்ராவை அடித்தே கொன்றுள்ளான்.

பாவம் எந்த தவறும் செய்யாத ஒரு ஆத்மா இப்படி கொடூரமாக உயிரிழப்பதை எந்த ஒரு மனித மனமும் விரும்பாது. பேரன்புக்கும் தாய்மைக்கும் உதாரணமாக பெண்களை சொல்வதுண்டு பிருந்தா போன்று ஒரு சில பெண்கள் ஏன் இப்படி கொடூர குரூர மனப்பான்மையோடு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

கண்ணியமாக 4 பேர் இருக்கும் இடத்தில் இப்படி அசிங்கமாக நடந்தால் எல்லோருமே தவறு என்றுதான் சொல்வார்கள். அதுவும் வீட்டு ஓனர் அம்மா சும்மா இருப்பாரா? சாதாரணமான சின்ன விசயங்களையே அட்வைஸ்களையே ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது.

இப்போது 3 மாத குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் கம்பி எண்ணி கொண்டிருக்கிறாள் பிருந்தா. தவறான வழியில் சென்றால் யாருமே கேட்க கூடாதுன்னு நினைச்சு அதுவும் ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே ஐடியா கொடுத்து கொடூரமாக கம்பி கட்டை எல்லாம் கொடுத்து காலையில் கோலம் போடும்போது வந்து கொல் என சொல்வதெல்லாம் உச்சக்கட்ட குரூர ரகம்

எங்கே போகிறோம் நாம். மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் சென்னை டிக் டாக் அபிராமி போன்ற விசயங்கள் கடுமையாக விவாதிக்கப்பட்ட அளவுக்கு இது விவாதிக்கப்படவில்லை என்பது வருந்ததக்கது.