Connect with us

Latest News

துணை அதிபரின் சகோதரரை கொன்ற தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி தற்போது தாலிபான்கள் மீண்டும் தங்கள் ரத்தவெறி ஆட்சியை தொடங்கியுள்ளனர்.

ஆப்கனை சேர்ந்த பாதி மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து விட்டனர். ஆப்கனில் இனி நிம்மதியாய் இருக்க முடியாது என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டனர்.

ஆப்கனில் தாலிபான்களின் சேட்டைகள் கொஞ்சம் கூட அடங்கவில்லை என்பதே உண்மை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே, தாமே அதிபர் எனக் கூறியிருந்தார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தாலிபான்களை எதிர்த்துப் போராடி வந்தது.

இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைபிடித்தனர். பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அவரது உடலைக்கூட உறவினர்களுக்கு கொடுக்க மாட்டோம் அவரது உடல் அழுகட்டும் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.

பாருங்க:  20 நாள் ஆன பச்சை குழந்தையை வாலியில் அமுக்கி கொலை - கொடூர தந்தை கைது

Latest News

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.

இங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.

முழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாருங்க:  ஜப்பானில் தேசிய அவசர நிலை பிரகடனம்
Continue Reading

Latest News

தனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்

ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.

பாருங்க:  4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !
Continue Reading

Latest News

தமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா

தமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

கடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

பாருங்க:  4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !
Continue Reading

Trending