Connect with us

சீர்காழியில் போலீசை மிரட்டிய ரவுடி சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டான்

Latest News

சீர்காழியில் போலீசை மிரட்டிய ரவுடி சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டான்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48).  இவர் ஸ்டேஷன் பணியில் இருந்த போது தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த மணிமாறன்(31) என்பவர் அளித்த புகாரின் பேரில் தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் செந்தில் என்கிற கலைவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் செல்போனில் தொடர்பு கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை  தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து சீர்காழி போலீசார் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த கலைவாணன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன்,சப்இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த கலைவாணனை கைது செய்தனர். அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பாருங்க:  இயக்குனர் தயாரிப்பாளர் கே.ஆர் மனைவி மரணம்

More in Latest News

To Top