நடிகர் நாகேஷின் பிறந்த நாள் இன்று

30

நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள் இன்று.  நடிகர் நாகேஷ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இவர் குடும்பம் இருந்துவந்தது.

ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிந்த நாகேஷ் சில காலம் வேலைபார்த்துக்கொண்டே நடித்து வந்துள்ளார் சிறுவயதில் ஏற்பட்ட அம்மை தழும்புகள் முகத்தில் அப்படியே இவருக்கு இருந்து விட்டது.

தாயில்லா பிள்ளை என்ற தமிழ்படத்தில் அறிமுகமான நாகேஷ் , நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தார்.

நாகேசின் நடிப்புக்கு பல படங்களை உதாரணம் சொல்லலாம். அந்த காலத்தில் நாகேஷ் நடித்து வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிப்படம். நாகேசுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

பாலச்சந்தர் இயக்கிய நீர்க்குமிழி இவருக்கு நகைச்சுவையை தாண்டி இவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயரை இவருக்கு வாங்கி கொடுத்தது.

மேலும் அபூர்வ சகோதரர்கள், மெளனம் சம்மதம் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். நாகேஷ் நகைச்சுவை நடிப்பு மட்டுமல்லாமல் எல்லா பாத்திரங்களிலும் வெளுத்து வாங்குவார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

நடிகர் கமல்ஹாசனின் படங்களில் ஒரு கேரக்டராவது நாகேசுக்கு கொடுக்காமல் கமல் இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோப்பு சீப்பு கண்ணாடி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாது மிரண்டால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நாகேஷ் ஒரு சிறந்த நடிப்பு வித்தகர்.கடந்த 2009 ல் இவர் மறைந்தாலும் பலர் மனதில் வாழ்கிறார் இன்று இவரின் பிறந்த நாள் ஆகும்.

பாருங்க:  திரையரங்கம் திறக்காதது குறித்து சீனு ராமசாமி கடும் வேதனை