cinema news
இளையதிலகம் பிரபுவின் பிறந்த நாள் இன்று
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு சங்கிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தந்தையுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
80களின் மிக அழகிய நாயகனாக போற்றப்பட்டார். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
அரங்கேற்றவேளை, ஒருவர் வாழும் ஆலயம், ஆனந்த், சின்னத்தம்பி, நினைவு சின்னம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
தற்போதும் சீனியர் நடிகர்களுக்கு தந்தையாக , மாமாவாக என பல்வேறு விதமான குணச்சித்திரவேடங்களில் நடித்து வருகிறார்.
இன்று இவரின் பிறந்த நாள் இதையொட்டி இவரது மகன் விக்ரம் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.