கடந்த மார்ச்24 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமெங்கும் லாக் டவுன் ஸ்டார்ட் ஆனது. இதில் பல மால்கள், கோவில்கள், தியேட்டர்கள் மூடப்பட்டது.
தற்போது பெரும்பாலானவை திறக்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலும் விஜய் நடித்த மாஸ்டர் படம், சூர்யா நடித்த சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தியேட்டர் திறக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார் . மேலும் நாடகங்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த பார்வையாளர்களுடன் இயங்கலாம் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.