விஜயுடன் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவையில் இணைந்திருப்பார் வடிவேலு. அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக அமைந்த படம் “ஃபிரண்ட்ஸ்”. வடிவேலு செய்த நகைச்சுவையுமே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
விஜயின் முதலாளியாக அந்த படத்தில் நடித்திருப்பார் வடிவேல். நேசமணியாக வந்த வடிவேலு பேசிய வசனம் “அமைதியாக வேலையை பாருங்கடா அப்ரசண்டிகளா”, விஜய், சூர்யா இருவரையும் ‘அப்ரசன்டி’என்று அழைத்து வருவார்.

திடீரென கதாநாயகனாக மாறிய வடிவேலு “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” படத்திலும் நடித்தார். பெரிய அளவில் வசூலை ஈட்டி தரவில்லை என்றாலும் அந்த படத்தினுடைய ‘ஆடியோ லாஞ்ச்’ நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிப்பாக வரவேண்டும் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் விஜய்க்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
முதலில் வருகிறேன் என்று சொன்ன விஜய் பிறகு சில காரணங்களால் தன்னால் வர முடியாது என சொல்லியிருக்கிறார். விஜயை போலவே சூர்யாவிற்கும் அழைப்பு கொடுக்கபட்டிருந்தது. விஜயின் வருகையை குறிப்பிட்டுத்தான் சூர்யாவிற்கு அழைப்பு விடுத்தோம், ஆனால் விஜய் வராமல் போனல் அதனை சூர்யாவிடம் எப்படி சொல்வது என தவித்தாராம் மாணிக்கம் நாராயனன்.
விஜயும், சூர்யாவும் வந்தால் விழா கலைக்கட்டும் என நினைத்த மாணிக்கம் நாராயணன் விஜயை சந்தித்து மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார். விஜயோ வாய்ப்பு குறைவுதான் என சொல்லிவிட்டாராம்.
குறிப்பிட்ட தேதியில் விழா நடைபெற திடீரென அங்கே வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாரம் விஜய். படத்தின் பாப்புலாரிட்டிக்கு விஜய் மிகப்பெரிய உதவியை செய்தார் என மாணிக்கம் நாராயணன் மகிழ்வுடன் சொல்லியிருப்பார் ஒரு தருணத்தில்.