Latest News
என்னுடைய பிறந்த நாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுதான் அவருக்கு முதல் பிறந்த நாள் ஆகும்.
இந்த நிலையில் பிறந்த நாள் குறித்து கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாளுக்கு
என் பிறந்தநாளையொட்டி, நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள். வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள். திராவிட மாடல் அரசின் 9 மாதகால சாதனைகளை விரிவாக எடுத்துரையுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
