எஸ்.பிபிக்கு விரைவில் நினைவு இல்லம்- அவரது மகன் எஸ்.பி.பி சரண்

24

நேற்று முன் தினம் காலமான பாடகர் எஸ்.பி.பியின் உடல் சென்னை திருவள்ளூர் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் அவர்களது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் இறந்த இடத்தில் பெரிய மணிமண்டபம் போன்ற நினைவு இல்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து 3 நாட்கள்தான் ஆகிறது. அதனால் விரைவில் இது குறித்து முடிவெடுத்து இதற்கான ப்ளான்கள் வடிவமைத்து ஒரு வாரத்தில் தெரியப்படுத்தப்படும்.

அவர் இசையை விரும்பும் இந்திய மக்களின் சொத்து, அவருக்காக கட்டப்படும் இடத்தில் மிகப்பெரிய அளவில் நினைவிடம் கூகுள் மேப்ஸில் தேடினால் உடனடியாக காட்டக்கூடிய அளவில் மிக புகழ்பெற்ற ஒரு இடமாக கட்ட தீர்மானித்திருக்கிறோம் என எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார்.

பாருங்க:  மிஷ்கின் படத்தில் வடிவேலு – சிம்புவுடன் 17 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி !