Latest News
தமிழ் முறைப்படி பிறந்த நாள் கொண்டாடுவதால் ஏற்படும் நற்பலன்கள்
தமிழ் முறைப்படி பிறந்தநாள் கொண்டாடும் முறை!!!
இங்கு கூறியுள்ளபடி பிறந்தநாள் கொண்டாடுவதால் நாம் நம்முடைய தமிழ் பண்பாட்டு முறைப்படி பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என்று அர்த்தம்.
8.8. 1970 அன்று நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம்;
ஆடி மாதம் வரக் கூடிய மகம் நட்சத்திரம் கூடிய நாள் என்று இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8 அன்று நீங்கள் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள்.
இது தவறு !!!
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் வரக்கூடிய மகம் நட்சத்திரம் அன்று உங்களுடைய பிறந்த நாளை நீங்கள் கொண்டாட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாத மக நட்சத்திர நாளானது ஆகஸ்டு 8 ஆம் தேதி அன்று வராது .
அதற்கு முன்பு அல்லது பின்புதான் வரும்.
அதைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்க தெரிந்திருக்க வேண்டும்
அல்லது
உங்களுக்கு என்று ஒரு ஆஸ்தான ஜோதிடர் நெருங்கிய நண்பராக இருந்தால் ஒவ்வொரு வருடமும் நீங்கள் இதை கண்டுபிடிக்கலாம்.
தமிழ்நாட்டில் இரண்டு பழமையான கோயில்களில் 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கின்றன.
ஒன்று திருவிடை மருதூர் சிவாலயம் இன்னொன்று சென்னை மாநகரத்தில் உள்ள திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோயிலிலும் 27 நட்சத்திரங்கள் அமைந்திருக்கின்றன .
உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் உள்ள குளிகை காலம் அல்லது குரு ஓரை அல்லது சுக்கிர ஓரை வரும்பொழுது இந்த கோயில் ஒன்றுக்கு நீங்கள் செல்ல வேண்டும் .
உங்களுடைய ஜென்ம நட்சத்திர லிங்கத்திற்கு முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்த பிறகு உங்களுடைய பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பூசாரிக்கு கண்டிப்பாக உங்கள் வயதுக்கு உரிய பணத்தை தானமாக தட்சணையாக தர வேண்டும் .
அதன்பிறகு கோயில் வாசலுக்கு வந்து குறைந்தது மூன்று அனாதைகள் அல்லது சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ஆடை தானமும் செய்ய வேண்டும்.
மிகுந்த ஆன்மீகத் தேடல் உள்ளவர்களும் சீக்கிரம் எல்லாவிதமான சோகங்களும் துயரங்களும் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
இதை வாசிக்கும் எல்லோரும் மேலே உள்ள இரண்டு கோயில்களில் ஏதோ ஒரு கோவிலுக்கு செல்வது கடினம்.
எனவே உங்கள் ஊரில் உள்ள பழமையான சிவாலயத்திற்குச் செல்லுங்கள் .
அங்கு நவக்கிரக சன்னதி இருக்கும்.
நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திர பகவானுக்கு நீங்கள் இதேபோல அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யவேண்டும்.
உங்கள் பிறந்த இருக்கும் நாளன்று நவக்கிரக சன்னதியிலுள்ள சந்திர பகவான் உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தில் இருப்பார் .
வேறுவிதமாக சொல்வதாக இருந்தால் அன்றைக்கு உங்களுடைய ஜென்ம நட்சத்திர அதிபதி சந்திர பகவானின் மீது ஆவாகனம் ஆகியிருப்பார்.
சிவாச்சாரியாருக்கு தட்சிணை தர வேண்டும்.
அதன்பிறகு கோயில் வாசலுக்கு வந்து குறைந்தது மூன்று அனாதைகள் அல்லது சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆண்டு தோறும் தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்களுடைய ஆத்ம பலம் அதிகரிக்கும்!
குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அதிகரிக்கும்!!
எந்த கோயிலில் இது போன்று செய்து வருகிறீர்களோ அந்த கோயிலில் உள்ள மூலவர் அம்பாளின் பரிபூரணமான வரங்கள் உங்களுக்கு கிடைக்கும்!!!
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வழிமுறைப்படி உலகம் முழுவதும் நம்முடைய தமிழ் மக்கள் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
கால மாற்றத்தால் இந்த வழிமுறை மறந்து போய்விட்டது .
நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் ஆசீர்வாதத்தால் இதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.