cinema news
வாவ் இவ்ளோ வசூலா?…வாட் அ சர்பிரைஸ் என சொல்ல வைத்த டாப் 5 படங்கள்!…
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான “பிகில்” படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூலையும் பெற்று தந்துள்ளது.
இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கணவு படமான “பொன்னியின் செல்வன்”. படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. அதில் “பொன்னின் செல்வன்- 2 ” வசூலை வாரிக்குவித்தது. ஏறத்தாழ 323 கோடி ரூபாய் வரை வசூல் சென்றுள்ளது.
திரை உலகத்தின் முன்னேற்றத்திற்காக தனது அர்ப்பணிப்பாடு கூடிய உழைப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாக கொடுத்து வருபவர் கமல்ஹாசன். அவருடைய சினிமா வரலாற்றில் அவருக்கு மிக முக்கியமானதாக மட்டுமல்லாமல் மறுவாழ்வு கொடுத்த படங்களில் ஒன்றாக மாறியது “விக்ரம்”.
எண்ணிப்பார்க்காத வசூலை ஈட்டி கொடுத்த படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்”. கமலினுடைய முந்தைய வசூல் சாதனைகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி தவிடு பொடி ஆக்கிய படம் இது. சுமார் 420 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை புரிந்தது.
இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”வசூலில் கலக்கியது. அவரே இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட இது அதிகமான வரவேற்பும், வசூலையும் பெற்றிருந்தது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா என மிக பெரிய நட்சத்திரங்களின் கூட்டணியோடு வந்தன இவை இரண்டும் . அதில் முதல் பாகம் 490 கோடி வரை வசூலித்தது.
தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகத்திலேயும் ;சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்து வரும் ரஜினிகாந்த் நடித்த “எந்திரன் 2.0” சமீபத்திய படங்களில் வசூலில் உச்சம் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “எந்திரன்” முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக வந்தது தான் “எந்திரன் 2.0”. வெளிவந்து கிட்டத்தட்ட 647 கோடி ரூபாய் வரை சென்று வசூல் வேட்டையாடியதாக சொல்லப்படுகிறது.