Latest News
உணவுக்கு உதவுவது போல் நடித்து 5 மாத குழந்தையை கடத்திய மர்ம நபர்- ஆனைமலை பரிதாபம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் தன் மனைவியுடன் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில் தனது தொழிலுக்காக தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வந்துள்ளார்.
அந்த நேரத்தில் அவர்கள் பசியுடன் இருந்ததை பார்த்துவிட்டு அவர்களுக்கு உதவி செய்கிறேன் என ஒரு மர்ம நபர் பெற்றோர் கண்ணில் மண்ணை தூவி விட்டு 5 மாத குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
கடத்தி சென்ற மர்மநபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
