cinema news
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் சிவகார்த்திகேயன்
இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பு உரிய விதிமுறைகளுடன் நடத்தப்படவில்லை என நேற்று வருவாய்த்துறையினரால் இப்படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஷூட்டிங்குக்காக சென்றுள்ள சிவகார்த்திகேயன் இங்குள்ள ஆனைமலையில் உள்ள புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார்.