Latest News
தஞ்சாவூரில் காணாமல் போன பச்சிளம் குழந்தை- 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் பர்மா காலனியை சார்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மனைவிக்கு பிறந்து 4 நாட்களேயான குழந்தை காணாமல் போனது. குழந்தைக்கு உதவி செய்வதாக நடித்த பெண் , கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்ததில் அந்த பெண் பட்டுக்கோட்டைக்கு குழந்தையை கடத்தி சென்றதும், கடத்திய பெண் பெயர் விஜி என்பதும் தனது மூன்றாவது கணவனிடம் காட்டி சொத்துக்களை பெறுவதற்காக குழந்தையை கடத்தி சென்றார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அக்குழந்தையை போலீசார் அவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
https://twitter.com/rava_gandham/status/1446850854699425797?s=20