cinema news
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்
தமிழ் சினிமாவையே கட்டியாண்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் இன்று. தமிழ் சினிமாவின் சரித்திரமாக சிவாஜி போற்றப்படுகிறார். 1928ம் வருடம் அக்டோபர் 1ம் தேதி தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் சிவாஜிகணேசன் பிறந்தார்.
சிவாஜி கணேசன் 1952ம் ஆண்டு வந்த பராசக்தி படத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் முதன் முதலில் நடித்தார்.
நாடகங்களில் சிவாஜி வேடம் போட்டு நடித்ததால் இயற்பெயர் கணேசனோடு சேர்த்து சிவாஜி ஒட்டிக்கொண்டது.
இன்று வரை நடிப்பு என்றால் அது சிவாஜிதான் என்றாகிவிட்டது. 5 மணிக்கு ஷூட்டிங் என்றால் 3 மணிக்கே ஆஜராகும் அளவு சிவாஜி மிகுந்த பொறுப்புடையவர். காட்சியை விவரித்துவிட்டால் நாம் எதிர்பார்ப்பதை விட அந்தக்காட்சியை பிரமாதமாக கொண்டு வருபவர் சிவாஜி அவர்கள்.
சரித்திர புருஷர்கள் பலரை பார்க்காதோருக்கு சிவாஜிதான் உதாரணம், வீரபாண்டிய கட்டபொம்மன், தெனாலிராமன், சிவபெருமான், கப்பலோட்டிய தமிழன், மஹாகவி காளிதாஸ் என சரித்திரத்திலும் கதைகளிலும் பார்த்த வடிவங்களை நிஜமாக்கியவர்.
இன்று அவரின் பிறந்த நாள் அவரை வணங்குவோம்.